40 அம்மா ரோந்து வாகனங்கள் தொடக்கம்

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக 40 அம்மா ரோந்து வாகனங்களின் செயல்பாட்டை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பெண்கள், குழந்தைகள் தொடர்பான புகார்களை 1091, 1098 ஆகிய எண்களில் தெரிவித்தால் அம்மா ரோந்து பணியில் உள்ள காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீர்வு காண்பார்கள்.