நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த திட்டம்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் கடந்த 2016 அக்டோபர் 24-ம் தேதி நிறைவடைந்தது. பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் காலதாமதமாகி வருகிறது. வரும் அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் நவம்பர், டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.